இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!!
வாதம், பித்தம், கபம் தோஷம் நீங்க, கல்லீரல் பாதிப்பு குணமடைய, மலச்சிக்கல் வாயுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் சரியாக இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அரசமரத்தின் இலையை வைத்து தான் அற்புதமான மருந்தை தயார் செய்து பயன்படுத்த போகிறோம். அரசமரத்தின் இலையை மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை கொலஸ்ட்ரால், கர்ப்பப்பை பிரச்சனை, மலச்சிக்கல், மலட்டுத் தன்மை போன்ற பலவிதமான நோய்கள் குணமடைகின்றது. வேப்ப மரத்தைப் போலவே அரச மரத்தின் இலைகள், காய்கள், வேர்கள் என அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.
அரச மரத்தின் இலையில் டானிக் அமிலம், அல்பாட்டிக் அமிலம், ஸ்டெராய்டு, விட்டமின், மெட்யூனிக், கிளைசிக் என பல்வேறு விதமான சத்துக்கள் உள்ளன. இந்த அரசமரத்தின் இலையை வைத்தா டீ செய்து குடிப்பதால் பல பிரச்சனைகளில் இருந்து நம் உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
அரச இலை டீ செய்யும் முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒன்றரை கிள்ஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டுப். 5 அரச இலைகளை எடுத்து அதில் நடு வேர்ப் பகுதியை நீக்கி இரண்டாக பிரித்து அதை இந்த தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் பச்சையும் மஞ்சளும் கொண்ட நிறமாக மாறும். பிறகு இதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம்.
இந்த அரச இலை டீயை குடிப்பதால் சரியாகும் நோய்கள்:
* இன்று எல்லாருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை மலச்சிக்கல். இந்த டீயை குடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை அடியோடு சரியாகின்றது.
* இரைப்பை தொடர்பான பிரச்சனைகள், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளையும் இது சரி செய்யும். பொதுவாக இரத்தம் சுத்தம் இல்லாமலும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும் போதும் உடல் சோர்வு, மூளை சோர்வு ஏற்படும் அரச இலையை டீ செய்து குடித்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.
* இன்று மக்களிடம் இருக்கும் பொதுவான பிரச்சனை சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய். இந்த நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க அரச இலை உதவுகின்றது. அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
* கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த அரச இலையில் தேநீர் செய்து குடிப்பதால் அந்த பாதிப்பை இது சரி செய்கின்றது.
* அடுத்ததாக சருமம் சார்ந்த பிரச்சனைகளையும் இது சரி செய்கின்றது. தோல் வெடிப்பு, தோல் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த டீ உதவுகின்றது.
* அடுத்ததாக பல் சார்ந்த பிரச்சனைகளையும் இந்த டீ சரிசெய்கின்றது. அதாவது இந்த டீயை நீங்கள் குடிப்பதால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து பல் வலி ஏற்படுவதை தடுக்கின்றது. மேலும் வாய் துர்நாற்றத்தையும் சரி செய்கின்றது.
* ஆஸ்துமா, சளி, காய்ச்சல், உடல் சோர்வு, அடல் வலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் இந்த டீயை குடிக்கும் போது சரியாகும். இந்த டீயை தொடர்ந்து மூன்று நாட்கள் நன்கு சூடாக சாப்பிடும் பொழுது சளி, ஆஸ்துமா பிரச்சனைகள் சரியாகும்.
* அரச மரத்தின் காய் பொடியாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனுடன் கடுக்காய் பொடியையும் வாங்கி இரண்டையும் கலந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் டீ தயார் செய்து குடித்தால் மேற்கண்ட அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும்.
* இந்த அரச இலையை லேசாக வெயிலில் காய வைத்து அதை அடுப்பு தீயில் காட்டி சாம்பல் ஆக்கி அந்த சாம்பலுடன் வேஸ்லின் கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அதை பாதத்தில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவினால் பாத வெடிப்புகள் சரியாகும்.
* அரச இலையை சாப்பிடும் பொழுது பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை பிரச்சனைகள் அனைத்தும் சரியாகின்றது.