Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

#image_title

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

இன்றைய காலத்தில் பண சேமிப்பு இல்லையென்றால் எதிர்க்கலாம் கேள்விக்குறியாகி விடும். பணம், செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு, எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது.

இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம். முக்கியமான வீட்டு பூஜை அறைகளில் நாம் செய்யும் சிறு தவறு நம்மிடம் இருக்கும் செல்வத்தை ஏதோ ஒரு வழியில் கரைத்து விடுகிறது. பூஜை அறையில் சில பொருட்களை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக வழி:-

*சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு செல்வதை பெருக்கும் தன்மை கொண்டது. இதை வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் செல்வம் பெருகும்.

*ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு பச்சரிசி நிரப்பிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 ரூபாய் நாணயத்தை போடவும். பிறகு அதில் கல் உப்பு நிரப்பி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும்.

*பூஜை அறையில் காமாட்சி விளக்கில் தீபம் ஏற்றும் பொழுது அதற்கு அடியில் தட்டு வைத்து சிறிதளவு பச்சரிசி மற்றும் 1 ரூபாய் நாணயம் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும்.

*அதேபோல் மஞ்சள் துளை அரிசியுடன் கலந்து காமாட்சி விளக்கு உள்ள தட்டில் வைத்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெருக தொடங்கும்.

*வாரம் ஒருமுறை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

*பணப்பெட்டி, பணப்பை இருக்கும் இடத்தில் வாசனை நிறைந்த ஏலக்காய், துளசி, இலவங்கம், சோம்பு, பச்சை கற்பூரவம் ஆகியவற்றை வைப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

Exit mobile version