Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் எடை செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா? இதய நோயாளிகள் கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஏற்ற ஆல்இன்ஆல் பானம்!

உடல் எடை செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா? இதய நோயாளிகள் கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஏற்ற ஆல்இன்ஆல் பானம்! 

உடல் எடையை குறைக்க வேண்டும் என அவசியம் நினைப்பவர்கள் குடிக்க வேண்டிய பானம் இது. இதைக் குடித்தால் உங்களை பசி அளவை கட்டுப்படுத்தும் உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து அகற்றி விடும். செரிமான பிரச்சனை இருக்காது. அதனால் மலச்சிக்கல் வரவே வராது. இதயம் பலமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெண்கள் இதை குடித்து வந்தால் அவர்களின் ஹார்மோன் சுரப்பு சமநிலைப்படுத்தப்பட்டு மாதவிடாய் பிரச்சனை சரியாகும். தலைமுடி வளர்ச்சிக்கு கர்ப்பமுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், என அனைவரும் குடிக்கக்கூடிய பானம் இது.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அதில் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை போடவும். ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலால் தயார் செய்ய முடியாத கொழுப்பு ஆகும்.

அடுத்து ஒரு ஸ்பூன் மல்லி விதைகளை சேர்த்துக் கொள்ளவும். இது உடம்பில் உள்ள வாயுவை வெளியேற்றும். சளி இருமலை குறைக்கும். ரத்த கொதிப்பை சரி செய்யும்.

அடுத்து இரண்டு ஏலக்காய்களை தட்டி போடவும். இது உடலின் மெட்டபாலிசத்தை சரி செய்து சோர்வை நீக்கும். நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக மற்றும் வரையில் நன்கு கொதிக்க விட்டு பிறகு வடிகட்டிக் கொள்ளவும். இதில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.

சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் தேன் சேர்க்க வேண்டாம். இதை  காலை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பருக வேண்டும். இது ஒரு நாளில் எல்லாம் சரியான ரிசல்ட் தராது. 15 நாட்களுக்குப் பிறகு நல்லதொரு ரிசல்ட் நமக்கு கிடைக்கும்.

ஒரு 48 நாட்கள் இதை தொடர்ந்து குடித்து வர உடல் எடை சீராக குறைந்து ஆரோக்கியமாக இருக்கும். இதனுடன் உணவு கட்டுப்பாட்டு பயிற்சியும் சிறிது உடற்பயிற்சியும் செய்வது நல்லது.

Exit mobile version