Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

நிறைய குடும்பங்கள் இன்றைக்கும் பலர் சாபத்தினாலும், நம் முன்னோர்கள் சாபத்தினாலும் அல்லது முற்பிறவிப் பாவங்களாலும் கஷ்டப்பட்ட வருகின்றனர். இந்தப் பாவங்களிலிருந்து விடுபட உங்களுக்கு பரிகாரம் வேண்டுமா? இதோ பலர் விட்ட சாபத்தில் இருந்து விடுபட உங்களுக்கான ஒரு முத்திரையும் அதனுடன் கூடிய ஒரு வழிமுறையும் கூறப்படுகிறது.

 

இந்த முத்திரையின் பெயர் பைரவ பைரவி முத்திரை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். காலையில் எழுந்தவுடன் எதுவுமே சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள்.

காலையில் எழுந்து பல் துலக்கி கொண்டு, முகம் கழுவி, தலையை சீவிக்கொண்டு, கிழக்குமுகமாக பார்த்து அமருங்கள்.

முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து கொள்ளுங்கள்.

அதன்பின் உங்களது வலது கையை, இடது கையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உள்ளங்கைகள் தொப்புளுக்கு நேரே இருக்கவேண்டும். இது பைரவ முத்திரை.

இந்த முத்திரையுடன் உங்களது வலது உள்ளங்கையின் மேல், எலுமிச்சை பழம் ஒன்றை வைத்து விட்டு, பைரவரை மனதார வேண்டிக் கொண்டு, உங்களுக்கு இருக்கக் கூடிய சாபங்கள் பாவங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று, வேண்டுதல் வைக்க வேண்டும்.

‘பைரவாய நம’ என்ற நாமத்தை 21 முறை உச்சரித்து, உங்களது பிரச்சினைகளை வைரவர் கால் பாதங்களில் வைத்து விடுங்கள். அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார்.

அது அந்த கையை அப்படியே மாற்றி இடது கையை மேலே வைத்து மறுபடியும் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து 21 முறை ‘பைரவியே நமஹ’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். எலுமிச்சை பழத்தை தலையை மூன்று முறை சுற்றி அது இரண்டாக நறுக்கி கால் படாத இடங்களில் நசுக்கி தூரப் போட்டு விடுங்கள்.

இப்பொழுதுதான் நீங்கள் குளிக்கச் செல்ல வேண்டும். தலைக்குக் குளித்துவிட்டு நீங்கள் அணிந்திருந்த துணிகளை துவைத்து விட்டு எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. ஆனால் இதை செய்வதற்கு முன்னால் காக்கைக்கு சோறு வைத்து விட்டு காக்கை சாப்பிட்டு பிறகு நீங்கள் உங்கள் சாப்பாட்டை சாப்பிடலாம்.

21 நாள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வந்தால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அருள் பெறுவர்.

 

 

Exit mobile version