Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!

Do you want to remove the words of denial of God? The Supreme Court ordered the Tamil Nadu government!

Do you want to remove the words of denial of God? The Supreme Court ordered the Tamil Nadu government!

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தந்தை பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும்  எழுதப்பட்டுள்ளது. இது போன்ற கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள வாசங்கள் ,பெரும்பாலான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் ,இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக இருகின்றது எனவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.அதில் மனுதார் தரப்பு வழக்கறிஞர் தந்தை பெரியார் கூறியுள்ள கடவுள் மறுப்பு வாசங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுப்பினார்.இதையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version