அசைவ உணவுகளில் அதிக ஆரோக்கியம் நிறைந்தவை மீன்.அதிக சுவை நிறைந்த மீனை ருசிக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.எளிதில் ஜீரணமா,உடல் எடை அதிகரிக்காமல் இருக்க அசைவப் பிரியர்கள் மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நாம் உண்ணும் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க், மெக்னீசியம்,பொட்டாசியம்,கால்சியம்,புரதம்,பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.இது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. டூனா,சார்டினஸ்,சால்மோன்,ஸ்வார்ட்பிஷ் போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு இருக்கிறது.
அதிக கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும் மீன்களை சாப்பிட்டால் சருமப் பிரச்சனை நீங்கும்.கண் பார்வை தெளிவாகும்.
மூளையில் இருக்கின்ற செல்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள ஒமேகா 3 அமிலம் பெரிதும் உதவுகிறது.மீனில் உள்ள வைட்டமின் டி சத்து உணவில் இருக்கின்ற கால்சியத்தை உறிந்து எலும்புகளுக்கு வழங்குகிறது.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் காணப்படுகிறது.எனவே அதிக கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் நமது இதய ஆரோக்கியம் மேம்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள் மீனை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.மீனில் இருக்கின்ற வைட்டமின் டி சத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.தாய்மார்கள் மீனை உட்கொள்ளவதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வு,மயக்கம் போன்ற பிரச்சனைகளை தடுக்க மீனை உணவாக சாப்பிட்டு வரலாம்.குழந்தைகளுக்கு மீனை உணவாக கொடுப்பதால் மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்.