Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!!

#image_title

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது 2023 2024 ஆம் ஆண்டு நான்காம் கல்வியாண்டிற்கான நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

 

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) என்னும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

 

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கான 2016- 2017 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இந்த பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

 

.

1.இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)

 

2. இளங்கலை காட்சிக்கலை

(எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)

 

3. இளங்கலை காட்சிக்கலை

(ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography)

 

4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை

எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

 

5. இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)

 

6. இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சி பயன்) Bachelor of Visual Arts

(Animation and Visual Effects)

 

இதற்கான விண்ணப்பங்களை 11.05.2023 முதல் 31.05.2023 வரை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவு தபால் மூலம் கல்லூரியின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

 

கல்லூரி முகவரி :-

 

முதல்வர், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600 113.

 

02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் பதிவு தபால் கல்லூரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் இந்த பயிற்சி நிறுவனத்தில் திரைப்படத்துறையில் சாதிக்க காத்திருக்கும் பல இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு அரிய மையமாகும். இதனை பயன்படுத்தி நிறைய பேர் திரைப்படங்களில் இயக்குநராக, ஒளிப்பதிவாளராக படத்தொகுப்பாளராக, ஏன் நடிகர்களாக கூட உருவாகியுள்ளார்கள்.

 

தொலைக்காட்சி துறையில் சாதிக்க நினைப்பவர்கள் இந்த கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டப்படிப்பு பெறுவதும் உண்டு. முன்பு எம் ஜி ஆர் திரைப்பட கல்லூரியில் பட்டயப் படிப்பு, அதாவது டிப்ளமோ படிப்பு மட்டுமே இருந்தது.

தற்போது இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தனித்தனியாக இருந்தாலும் அதற்கான பட்டப்படிப்பு புதிதாக சேர்க்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது இதனை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்தி திரைத்துறையிலும், தொலைக்காட்சி துறையில், சாதிக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version