Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் எலும்பு எஃகு போன்ற வலிமை பெற வேண்டுமா? இந்த ஒரு பொடியை சூடான நீரில் கலந்து குடிங்க போதும்!!

இக்காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.தற்பொழுது நாம் பின்பற்றி வரும் உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதமாக இருப்பதால் இளம் வயதிலேயே மூட்டு வலி,கை கால் வலி,முதுகு வலி போன்ற எலும்பு சார்ந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

இந்த பாதிப்புகளில் இருந்து மீள எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்காக பிரண்டையுடன் சில பொருட்களை கொண்டு பொடி செய்து உட்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:-

**50 கிராம் பிரண்டை தண்டு
**10 கிராம் ஜீரா
**10 கிராம் பெப்பர்
**10 கிராம் பூண்டு பற்கள்
**சிட்டிகை அளவு மஞ்சள் பொடி

பயன்படுத்தும் முறை:-

1)ஒரு கைப்பிடி பிரண்டை தண்டை சிறு சிறு பீஸாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பிரண்டை துண்டுகளில் இருந்து நார் மட்டும் உரித்து நீக்கிவிட வேண்டும்.

2)பிறகு இந்த பிரண்டை துண்டுகளை ஒரு காட்டன் துணியில் பரப்பி வெயிலில் ஒரு வாரம் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.

3)காய வைத்த பிரண்டையில் ஈரம் இருக்கக் கூடாது.இந்த பிரண்டையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4)அடுத்து ஜல்லடையில் இந்த பிரண்டை பவுடரை கொட்டி சலித்து வைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5)அடுத்து 10 கிராம் சீரகம்,10 கிராம் கருப்பு மிளகை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஒரு’தட்டில் கொட்டி’ஆறவைக்க வேண்டும்.

6)அதன் பிறகு பூண்டு வற்றலை வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

7)பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து வைத்துள்ள சீரகம்,கருப்பு மிளகு மற்றும் பூண்டு பற்களை போட்டு பவுடராகும் வரை அரைக்க வேண்டும்.

8)இந்த பொடியை அரைத்து வைத்துள்ள பிரண்டை பொடியுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

9)அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் கொட்டி நன்கு மிக்ஸ் செய்து ஒரு ஈரமில்லாத பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

10)பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

11)அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பிரண்டை கலவை 10 கிராம் அளவிற்கு கொட்டி கொதிக்க வைத்து பருகி வந்தால் கை கால் வலி,முழங்கால் வலி,பாத வலி மற்றும் முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

Exit mobile version