Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் குழந்தை ஒழுக்கம், படிப்பு என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்க வேண்டுமா..?? இந்த 5 பழக்கங்களை மட்டும் கற்றுக் கொடுங்கள்..!!

குழந்தைகளது பழக்க வழக்கங்கள் என்பது பெற்றோர்களாகிய நாம் வளர்க்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கக்கூடிய மற்றும் பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதத்தில் தான் குழந்தைகளும் வளர்வார்கள். எனவே சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தேவையான ஒழுக்க முறைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு தேவையான சூழ்நிலைகளை பெற்றோர்கள் தான் அமைத்து தர வேண்டும்.

குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெற்றோர்கள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி தற்போது காண்போம்.

1. பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய வீட்டுப்பாடத்தை மறுபரிசீலனை செய்வது:

தினமும் காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் குழந்தைகள் தங்களுடைய வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முந்தைய நாள் கற்றதை திருப்பி பார்ப்பதால் அவர்களுடைய நினைவாற்றல் மேம்படும். முந்தைய நாள் பாடங்களை ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்வதால், அன்றைய தினம் பள்ளியில் நடத்தப் போகும் பாடங்களின் அறிமுகத்திற்கு தயாராகிவிடுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், காலையில் படித்தவற்றை திருப்பி பார்க்கும் குழந்தைகள் 30 சதவீதம் அறிவுச் செறிவுடன் வளர்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

2. காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது:

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டில் கொடுத்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளுடைய உடலில் நீர்ச்சத்து இருந்தால் அவர்களுடைய மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்படாது.

கடந்தாண்டில் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படும் குழந்தைகள் 25% விழிப்புடன் கற்பதாக தெரியவந்துள்ளது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இதனால் அவர்களுடைய படிப்பு கெட்டுவிடும் வாய்ப்புள்ளது.

3. செல்போன் கொடுப்பதை தவிர்ப்பது:

காலையில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். டிவி, லேப்டாப் மற்ற கேஜட்டுகளில் இருந்தும் அவர்களை விலக்கி வைக்க வேண்டும். அதிகமாக டிஜிட்டல் திரைகளை காண்பது அவர்களுடைய மூளையை சோர்வடையச் செய்யும். இதனால் கவனச் சிதறல் ஏற்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் காலையில் அதிக திரைநேரத்தை கொண்டிருக்கும் குழந்தைகள் கவனம் 40 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுடைய ஆர்வம் குறையும். காலையில் குழந்தைகளை புத்தகம் படிப்பது, தோட்ட வேலைகள் செய்வது என ஆக்டிவாக வைக்கலாம்.

4. அதிகாலை சீக்கிரம் எழுவது:

குழந்தைகளை அதிகாலை சீக்கிரம் விழிக்க பழக்க வேண்டும். குழந்தைகள் சீக்கிரம் எழுந்தால்தான் பள்ளிக்கு செல்ல தயாராக அதிகமான நேரம் கிடைக்கும். அமைதியாகவும், உற்சாகமாகவும் அந்த நாளை தொடங்க முடியும். தாமதமாக எழுந்தால் எல்லாவற்றையும் அவசர அவசரமாக செய்துவிட்டு கிளம்ப வேண்டியிருக்கும்.

சில குழந்தைகள் காலை உணவையே தவிர்க்கும் சூழல் ஏற்படும். இதனால் எரிச்சலுடன் பள்ளிக்கு கிளம்புவார்கள். 2023இல் செய்யப்பட்ட கணக்கெடுப்பில், காலை 7 மணிக்கு முன்பாக எழும் குழந்தைகள் பள்ளியில் அதிக ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பதாக தெரிய வந்தது.

5. ஆரோக்கியமான உணவை கொடுப்பது:

குழந்தைகளுக்கு காலையில் ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் காலை உணவுதான் மூளை உணவு எனப்படும். முட்டை, ஓட்ஸ், பழங்கள், பாதம், பிஸ்தா போன்ற கொட்டைகள், உலர் பழங்கள் போன்றவை கொடுக்க வேண்டும். இவற்றில் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு ஆகியவை உள்ளன. இவை மூளைக்கு உற்சாகத்தை கொடுத்து படிப்புக்கு உதவும். குழந்தைகள் பள்ளியில் சிறந்து விளங்க ஆரோக்கியமான உணவும் காரணம்.

Exit mobile version