முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டுமா… இதோ அதற்கான சில எளிமையான வழிமுறைகள்…
நமது முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நாம் பல சிகிச்சைகளை மேற்கெண்டு இருப்போம். சிலர் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விரைவாக தீர்வு தரக்கூடிய மருந்துகளை பயன்படுத்தி அதனால் மேலும் சருமத்திற்கு தீமைகளை பெற்றிருப்போம். இந்த பதிவில் சில இயற்கையான பொருள்களை வைத்து பக்க விளைவுகள் இல்லாமல் எவ்வாறு முகத்தை பொலிவாக மாற்றுவது என்று பார்க்கலாம்.
முகத்தை பொலிவாக பளபளப்பாக மாற்றுவதற்கு நாம் கற்றாழை, வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய பொருட்களை தனித் தனியாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.
* கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழிந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவாக மாறும்.
* எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரால் கழுவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* வெங்காயம் மற்றும் பூண்டை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் தடவிக் கொண்டு 10 நிமிடம் கழிந்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை மறையும். கருமையான புள்ளிகள் மறையத் தொடங்கும்.
* தக்காளியை எடுத்து சாறு எடுத்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழிந்து முகத்தை கழுவினால் முகத்தின் கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
* வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட்டாக தயாரித்து அதை முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழிந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் அல்லது வாரம் 3 முதல் 4 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவாக மாறும்.