உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!!
இதுவரை ஏலக்காயை நாம் அனைவரும் சமையலில் பயன்படுத்தும் ஒரு வாசனை பொருளாகத்தான் நினைத்து இருப்போம். ஆனால் ஏலக்காயை கொண்டு உங்க சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதே நேரத்தில் நல்ல தூக்கத்தையும் பெறலாம் என்கிறது ஆயுர்வேதம். முகத்தில் உள்ளப் பருக்களை விரட்டியடித்து பொலிவான சருமத்தை பெற ஏலக்காய் உதவுகிறது. இந்த ஏலக்காய் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தினால் உங்கள் சருமம் மிக பொலிவாகஇருக்கும். இந்திய சமையலை பொருத்த வரை ஏலக்காய் மிகப்பெரிய முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு நறுமணம் மிக்க மசாலாப் பொருளாகவும் உள்ளது.
நாம் தயாரிக்கும் பாயாசம், மற்றும் இனிப்பு வகைகளில் ஏலக்காய் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களில் ஏலக்காயை பயன்படுத்த முக்கிய காரணம் என்னவென்றால் அது சீரண சக்தியை அதிகரிக்கும். உணவுகள் எளிதாக சீரணிக்க உதவும். இதைத் தவிர்த்து ஏலக்காய் நம் சரும நலன்களிலும் நிறைய நன்மைகளை அளிக்கிறது என்கிறார்கள் சரும நிபுணர்கள். இந்த ஏலக்காயை கொண்டு நீங்கள் தேநீர் தயாரித்து குடிக்கலாம்.இந்த மசாலாப் பொருள் ஜிங்கிபெரேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவர விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தை பொருத்த வரை ஏலக்காயின் மருத்துவ குணங்கள் ஏராளம். ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் செல்கள் சேதமடைவதை ஏலக்காய் தடுக்கிறது.
அதே மாதிரி இதை வாயில் போட்டு மெல்லும் போது வாய் துர்நாற்றத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. சரும பராமரிப்பில் இதன் பயன்களை உணர்ந்த நிறுவனங்கள் ஏலக்காயை சோப்பு, பாடி வாஷஸ் மற்றும் பவுடர்களில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏலக்காயை கொண்டு உங்க சருமத்தை எப்படி அழகுபடுத்தலாம் என அறிவோம் மருவற்ற முகம் பெற ஏலக்காயில் ஆன்டி பாக்டீரியல் தன்மை காணப்படுகிறது. இது முகத்தில் ஏற்படும் பருக்கள், கொப்புளங்கள் இவற்றை சரி செய்ய உதவுகிறது. உங்களுக்கு முகத்தில் ஏராளமான பருக்கள் இருந்தால் இந்த ஏலக்காய் பேஸ் மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள கருமையை போக்கி நல்ல பளபளப்பையும் தருகிறது அதே நேரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் அளிக்கிறது.
1 டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடருடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தேயுங்கள். இதன் ஆன்டி பாக்டீரியாக்கள் தன்மை பருக்களை குணப்படுத்தவும், மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் மற்றும் பருக்களால் ஏற்பட்டுள்ள தழும்புகளை போக்கவும் உதவுகிறது. இந்த ஏலக்காய் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் இரவில் அப்ளே செய்து விடுங்கள். பிறகு சில மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை சிவந்த வலியுள்ள பருக்களை சீக்கிரமே ஆற்ற உதவுகிறது. அதே நேரத்தில் தேன் இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படும். இது உங்க சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். இது இரத்தத்தை சுத்திகரிக்கவும், சரும அழற்சியை போக்கி சருமம் பொலிவு பெற உதவுகிறது.