Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்!

ஒவ்வொரு ராசிக்கும் அவரவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். அவ்வாறு உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒன்று சரியில்லை என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று எதனை செய்தால் நன்மை என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இப்போது காணும் பரிகாரத்தை எந்தவித கஷ்டம் நேர்ந்தாலும் தடங்கல் நேர்ந்தாலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை காணலாம். மேலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது வேறு ஒரு பரிகாரத்தை எப்பொழுதும் செய்தல் கூடாது. முதலாவதாக குலதெய்வ கோவிலுக்கு சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் எண்ணெயின் மூலம் குலதெய்வத்திற்கு அபிஷேகம் அல்லது தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்வது மூலம் வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து கல்யாணம் தடைபட்டுக் கொண்டிருந்தால் சுப நிகழ்ச்சி ஏற்படும். அடுத்ததாக நீங்க ஆலயம் செல்லும் பொழுது நீங்கள் கோவிலுக்கு என தீப்பெட்டி அல்லது மின் விளக்குகள் வாங்கி கொடுப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

 

Exit mobile version