Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

இந்த வழிபாட்டினை பெண்கள் செய்யும் பொழுது அவருடைய கணவரின் உயர்வினை கண்கூடாக காண முடியும். தன்னுடைய கணவர் கடுமையாக உழைக்கிறார் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை, மேலும் அவருக்கான மரியாதையும் கிடைப்பதில்லை என்று எண்ணுகிற பெண்கள், இந்த எளிய வழிபாட்டினை செய்வதன் மூலம் அவருடைய பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர்வதை கண்டிப்பாக காண முடியும்.

தன்னுடைய கணவருக்கு இந்த சமூகத்திலும், உறவினர்களின் மத்தியிலும் எந்த ஒரு அந்தஸ்தும் கிடைப்பதில்லை. அவரை மட்டம் தட்டியே பார்க்கிறார்கள் என்று எண்ணுபவர்கள் இந்த பரிகாரத்தை நிச்சயம் செய்யலாம். ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுதே அதற்கான பலனை உங்களால் உணர முடியும்.

சொந்தமாக தொழில் செய்பவர்களும் அதில் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் செய்தால் போதுமானது.

தனது தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றம் வேண்டும் என நினைக்கக் கூடிய ஆண்கள், பெண்கள் என இருவருமே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். பிறப்பு, இறப்பு தீட்டு மற்றும் மாதவிடாய் தீட்டு இது போன்ற தீட்டுகள் இருக்கக்கூடிய சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

அசைவம் சாப்பிட்டால் தவறில்லை. இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று செய்து கொள்ளலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பு, படிகார கல் மற்றும் அடுப்புக்கரி ஆகிய மூன்றையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இந்த மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் வைத்து, உங்களது கணவரோ அல்லது நீங்களோ உறங்கக் கூடிய இடத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை மூடி வைக்கக் கூடாது, திறந்த நிலையில் மட்டுமே வைக்க வேண்டும். இது மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு இதிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான ஆற்றல்கள் நாம் தூங்கும் பொழுது நமக்கு அருகில் இருந்தால், நேர்மறை ஆற்றல்களை நமக்குள்ளும் நமது வீடு முழுவதிலும் பரவச் செய்யும். மேலும் நமது குடும்பத்தின் மீது இருந்த கண் திருஷ்டிகளும் விலகும். இதனால் முன்னேற்றம் என்பது நிச்சயம் கிடைக்கும்.

இவ்வாறு இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை செய்து வைத்துக் கொண்டால், அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த பொருட்களை மாற்றி விட்டு புதியதாக வேறு பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இதனை முழு நம்பிக்கையுடன் செய்து வைத்துப் பாருங்கள் நிச்சயம் குடும்பம் முன்னேற்றம் மற்றும் கணவருடைய முன்னேற்றம் என்பது நடக்கும்.

Exit mobile version