உங்கள் குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக மாற ஆசையா? அப்போ வீட்டில் இதையெல்லாம் செய்யுங்கள்!!

0
150
Do you want your kids to be good at studies? So do all this at home!!

இன்று பெரும்பாலான பெற்றோர்களை பெரும் கலவையில் ஆழ்த்துவது பிள்ளைகள் தான்.மொபைல் போன்,TV,லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களில் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு வீணடித்து வரும் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை ஏற்படுகிறது.இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

குழந்தைகள் நன்றாக படிக்க,தங்களது திறமையை வெளிப்படுத்த அவர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும்.இன்று பல பெற்றோர் தங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.கிளாஸ் டாப்பராக வர வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி படிப்பில் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது.

குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தார் போல் படிக்க வைக்க வேண்டும்.ஒரே நாளில் அதிகமாக படிக்க வைக்காமல் சிறு சிறு பகுதியாக படிக்க வைக்க வேண்டும்.இப்படி செய்வதால் குழந்தைகள் ஆர்வமுடன் படிப்பதோடு படிக்கும் பாடம் மனதில் பதியும்.

குழந்தைகள் படித்து முடித்த உடன் அவர்களுக்கு பிடித்த பொருட்களை பரிசாக கொடுப்பதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.இதனால் தினமும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு தானாகவே உருவாகிவிடும்.

குழந்தைகளை நீண்ட நேரம் படிக்கச் சொல்லாமல் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு படிக்க சொல்லுங்கள்.இதனால் அவர்கள் சலிப்பின்றி படிப்பார்கள்.பெற்றோர்கள் குழந்தைகள் படிக்கும் பாடத்தை கதையாக விவரிப்பது அவர்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுப்பது போன்ற முறைகள் மூலம் அவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை தூண்டலாம்.

குழந்தைகள் படித்து முடித்தவுடன் அவர்களை பாராட்ட வேண்டும்.இப்படி செய்வதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.குழந்தைகள் படிக்கும் நேரத்தில் பெற்றோர்கள் TV பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.உங்களின் இந்த செயல் குழந்தைகளுக்கு படிப்பில் கவனச் சிதறலை ஏற்படுத்தக் கூடும்.