Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் தள்ளிப் போகாமல் உடனடியாக வர வேண்டுமா? இதை மூன்று நாட்களுக்கு குடித்தால் போதும்!!

மாதவிடாய் தள்ளிப் போகாமல் உடனடியாக வர வேண்டுமா? இதை மூன்று நாட்களுக்கு குடித்தால் போதும்!!

பெண்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் மாதவிடாய். மாதந்தோறும் இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த மாதவிடாய் சரியாக ஒவ்வொரு மாதமும் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் மாத கணக்கில் வராமல் இருந்தாலோ அல்லது தள்ளி போனாலும் அது உடலுக்கு ஆரோக்கியம் அற்றது. எனவே மாத கணக்கிலும் வராமல் இருந்த மாதவிடாய் வருவதற்கான ஒரு வீட்டு வைத்தியத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

முறை 1:
இந்த செய்வதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது வெல்லம். இந்த வெல்லத்தை சிறிதளவு உரலில் இடித்துக் கொள்ளவும். வெல்லத்திற்கு பதிலாக வேறு பொருளை சேர்க்க முடியுமா என்று கேட்டால் முடியவே முடியாது வெல்லம் மட்டும் தான் இதில் சேர்க்க வேண்டும்.

இரண்டாவதாக அரை தேக்கரண்டி ஓமத்தை எடுத்து இடித்து வைத்திருக்கக்கூடிய வெல்லத்தில் சேர்த்து மீண்டும் இடிக்க வேண்டும். இப்போது ஒரு டம்ளர் அளவு சுடுநீரில் நாம் எடுத்து வைத்திருக்கக் கூடிய வெல்லம் மற்றும் ஓமம் பவுடரை ஒரு தேக்கரண்டி அளவு இந்த சூடான நீரில் கலந்து கொள்ளவும்.

இதனுடன் அரை தேக்கரண்டி அளவு சீரகப் பொடியை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் அரை தேக்கரண்டி அளவு நெய்யை சேர்த்துக் கொள்ளவும். இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதை ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

முறை 2:
இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பிரியாணி இலை மற்றும் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

இது ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். இது நன்றாக கொதித்த பின்னர் ஒரு வடிகட்டியை வைத்து இதை வடிகட்டிக் கொள்ளவும். இதை வெதுவெதுப்பான சூட்டில் மிகவும் பொறுமையாக குடிக்க வேண்டும்.

இதை வெறும் வயிற்றில் மட்டுமே குடிக்க வேண்டும். இதுபோல் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை வராது.

மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டு முறையுமே வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடியது. எனவே எந்த விதமான மாத்திரைகளோ செயற்கை சிகிச்சைகளோ செய்யாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் எவ்வளவு நாள்பட்ட மாதவிடாயையும் நொடியில் வர வைக்க முடியும். இந்த இரண்டு ரெமிடியை செய்ய பயன்படுத்திய ஒவ்வொரு பொருளிலும் சத்துக்கள் மிகுந்து காணப்பட்டு மாதவிடாய் பிரச்சனை உடனடியாக சரி செய்யும் தீர்வு அதில் உள்ளது.

இந்த ரெமிடியை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் காய்கறிகள் பழங்கள் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

Exit mobile version