அடிக்கடி உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா? இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்க!
சில பேருக்கு அடிக்கடி கை கால்கள் மரத்துப் போகும். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக இருப்பது தான். இதுபோன்ற கை கால்கள் மரத்துப் போகின்ற பிரச்சனைக்கு நாம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து விரைவில் சரி செய்ய முடியும்.
1. பொதுவாக ஒரே செயலை தொடர்ந்து செய்யும் பொழுது நமது உடலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கை கால் மரத்து போதல் ஏற்படும்.
2. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு கை கால் மரத்து போதல் பிரச்சனை ஏற்படும்.
3. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும். மேலும் மரபணு பிரச்சனைகளால் கூட மரத்து போதல் பிரச்சனை ஏற்படலாம்.
எப்போதாவது கை கால்கள் மரத்து போனால் கவலை இல்லை. ஆனால் அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகின்றது என்றால் சிறிது கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரிடம் சென்று உரிய ஆலோசனை பெறுவது நல்லது.
இதற்கான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
ஒரு கப்பில் அரை ஸ்பூன் சுத்தமான பட்டை தூளை சேர்க்கவும். பட்டைத்தூளானது சுத்தமானதாக, ஒரிஜினலாக இருக்க வேண்டும். அதில் அடுத்ததாக ஒரு ஸ்பூன் சுத்தமான தேனை சேர்க்கவும். இதை நன்றாக கலக்கவும். இதனை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரவும். 15 நாட்களிலேயே நமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கை கால் மரத்து போதல் பிரச்சனை படிப்படியாக குறைவதை காணலாம்.
அதிக செலவும் இல்லாமல் அதிக செய்முறையும் இல்லாத எளிமையான வைத்திய முறை இது.