உங்கள் குழந்தைகள் கையில் எந்நேரமும் மொபைல் போன் உள்ளதா? இதை செய்தால் இனி அவர்கள் போனை டச் பண்ண மாட்டாங்க!
இன்றுள்ள குழந்தைகள் மொபைல் போனில் தான் நேரத்தை கழிக்க விரும்புகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.தற்பொழுது கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் எந்நேரமும் கேம் விளையாடுவது,வீடியோ பார்ப்பது போன்ற விஷயங்களில் தங்களின் பொன்னான நேரத்தை வீண் செய்து வருகின்றனர்.
சிறு வயதில் நண்பர்களுடன் விளையாடுவது,வீட்டில் பெற்றோருக்கு உதவி செய்வது போன்ற செயல்களுக்கு நம் நேரத்தை செலவிட்டு வந்தோம்.ஓடி பிடித்து விளையாடுவது,கிரிக்கெட்,கபடி போன்ற விளையாட்டுகள் நம் உடலை ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ள உதவின.
நன்கு விளையாடி விட்டு வந்து தூங்குவது அவ்வளவு சுகமாக இருக்கும்.ஆனால் இன்றுள்ள பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் செல்லவே சலித்து கொள்கின்றனர்.நாள் முழுவதும் மொபைலில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகளால் பல நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
இதனால் அவர்கள் தனிமை விரும்பியாக மாறி விடுகின்றனர்.குடும்பத்தில் உள்ள நபர்களிடம் மனம் விட்டு பேசுவது,நண்பர்களுடன் விளையாடுவது போன்ற பல நல்ல பழக்கங்களை இழக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
குழந்தைகளிடம் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தை குறைத்து நல்ல பழக்கங்களை அதிகப்படுத்த குடும்ப உறுப்பினர்கள் சில விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஓவியம் வரைவது,வீட்டை அழகு படுத்துவது போன்ற நல்ல பழக்கங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்காலம்.
உடைகளை மடித்து வைப்பது,வீட்டை சுத்தம் செய்வது போன்ற நல்ல பழக்கங்களை செய்ய வைக்கலாம்.
சமைக்கும் பொழுது உடன் இருந்து உதவி செய்யும் பழக்கத்தை கொண்டு வரலாம்.வீட்டிற்குள் செஸ்,கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாட ஊக்குவிக்கலாம்.நடனம் ஆடுவது,பாட்டு பாடுவது போன்ற நல்ல பழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுக்கலாம்