பணிக்கு வராமல் ஏமாற்றிய மருத்துவர்கள்!! திடீரென ரெய்டு!! அதிர்ந்த மருத்துவமனை!!

0
80

Kovai: கோவை மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் நேற்று இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அனைவரும் சரியாக வேலை செய்தாலும் சில மருத்துவர்களின் கெட்ட செயலால் மருத்துவமனைக்கு தீங்கு நேர்கிறது. அதனை தொடர்ந்து இரவு நேரங்களில் அசம்பாவிதம் போன்ற விபத்து ஏற்பட்டால் முதலில் அரசு மருத்துவமனைக்கே செல்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் சில மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக பணிக்கு வருவதில்லை.

அப்போது எமர்ஜென்ஸி என்றால் மருத்துவர்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்து சிகிச்சை செய்யப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதே இல்லை என பல புகார்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீரென கோவையில் உள்ள உக்கடம், மதுக்கரை , புல்லுக்காடு , கரும்புக்கடை, குனியமுத்தூர் போன்ற சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில இடங்களில் அரசு ஊழியர்கள் பணியில் இல்லை என்று அவர் அறிந்தார்.

அந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பணியில் இல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொள்ளும் போது மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உடன் இருந்தார்கள் என கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற தவறுகள் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.