Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!

  1. சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!

சிறுநீரக நோய்த்தொற்று என்பது பைலோனெப்ரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது அவசியம். அதற்கு மேல் அதிகமானால் சிறுநீரகங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது சிறுநீர்ப் பாதையில் நுழையும் பாக்டீரியாக்கள் தான். இது இரத்த ஓட்டத்தில் நுழைந்து உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை உருவாக்குகிறது. எனவே ஒவ்வொரு வரும் சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகளை கவனிக்க வேண்டியது அவசியம்.

சிறுநீரக நோய்த்தொற்றால் சிறுநீரக வலி:

சிறுநீரகத்தில் வலி மற்றும் அசெளகரியம் ஏற்படுவது மிகவும் பொதுவானது. இந்த வலியானது கீழ் முதுகு மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வலியை ஏற்படுத்துகிறது.

சிறுநீரகங்கள் அமைந்திருக்கும் விலா எலும்புகளுக்கிடையில் வலியை உணருகின்றனர். சிலர் அடிவயிற்று பகுதியில் மற்றும் முதுகில் கூட வலியை உணர்கிறார்கள்.

​மேலும் சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படலாம். சிறுநீரக பாதைகளில் அதிகப்படியான பாக்டீரியா உற்பத்தியாவதால் இந்த குளிர் உண்டாகிறது. எனவே காரணமின்றி காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

 

​சிறுநீரக நோய்த்தொற்றால் சோர்வு:

சிறுநீரக நோய்த்தொற்று இருப்பவர்கள் மிகவும் சோர்வாக உணருவார்கள். நோயாளி பலவீனமாக உணர நேரிடும். இதனால் ஆற்றலையும் அவர்கள் இழக்க நேரிடலாம். எனவே நோய்த்தொற்றை எதிர்த்து போராட போதுமான அளவு ஓய்வு அவசியம்.

 

​சிறுநீரக நோய்த்தொற்றால் சில சமயத்தில் சிறுநீர்ப்பை காலியாக இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல்கள் இருக்கும். நீங்கள் சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர் எஞ்சிய மாதிரி உணர்வே தோன்றும். சிறுநீர் துர்நாற்றம் அடைவதோடு நுரையுடன் கழிக்க நேரிடும்.

 

​சிறுநீரக நோய்த்தொற்றால் குமட்டல்:லேசான குமட்டல் மற்றும் வாந்தி கூட சிறுநீரக நோய்த்தொற்றால் ஏற்படு கிறது. பசியின்மை, சோர்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் எடை இழப்பு ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் அடிவயிற்றில் ஏற்படும் வலி மற்றும் அழுத்தம் காரணமாக நீங்கள் குமட்டலை அனுபவிக்கலாம். இதனால் வாந்தியும் ஏற்படலாம். சிறுநீரகங்கள் சேதமடையும் போது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வாந்தி ஏற்படுகிறது.

 

​சிறுநீரக நோய்த்தொற்றால் மஞ்சள் காமாலை:

சிறுநீரகம் சரியாக செயல்படாத போது இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து மஞ்சள் காமாலை பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் கண்கள், தோல் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இரத்தத்தில் அதிகப்படியான பிலிரூபின் இருப்பதால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. சிறுநீரகம் வழியாக கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப்படாத போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

 

​சிறுநீரக நோய்த்தொற்றால் சிறுநீருடன் இரத்தம் கலந்து வருதல்:

 

கடுமையான சிறுநீரக நோய்த்தொற்று உள்ளவர்கள் சிறுநீரில் சீழ் அல்லது இரத்தம் கலந்து வருவதை பெறுகின்றனர். சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது ஹெமாட்டூரியா என்று அழைக்கப்படுகிறது.

 

நோய்த்தொற்றானது சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்திற்கு பரவும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் சிறுநீரகம் சேதமடையும் போது இரத்தத்தை சரியாக வடிகட்டாமல் வெளியேற்றுகிறது. இதனால் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுகிறது.

 

மேலும் மயக்கம், எரிச்சல், மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். எனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

Exit mobile version