Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவரின் எச்சரிக்கை.. உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் மட்டனை நினைத்துக்கூட பார்த்திடாதீங்க!!

இந்த உலகில் சைவ மற்றும் அசைவ பிரியர்கள் இருவகையினர் உள்ளனர்.இதில் அசைவ பிரியர்கள் மட்டன்,சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.நம் தமிழகத்தில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு என்று இருவகை ஆட்டிறைச்சி கிடைக்கிறது.

பிராய்லர் கோழி இறைச்சியை ஒப்பிடுகையில் ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து,மெக்னீசியம்,ஜிங்க்,வைட்டமின் பி 12 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சிக்கனை விட மட்டன் விலை அதிகமாக இருந்தாலும் அதில் நன்மைகள் நிறைந்திருப்பதால் பலரும் வாங்கி உண்கின்றனர்.இருப்பினும் சிலருக்கு ஆட்டிறைச்சி கெடுதல் விளைவித்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆரோக்கியம் நிறைந்த உணவாக இருந்தாலும் அதை அளவாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மட்டனை அளவாக எடுத்துக் கொள்வது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிகளவு ஆட்டிறைச்சி எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.தொடர்ந்து மட்டன் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படக் கூடும்.வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் மட்டன் உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு வரக் கூடும்.

உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆட்டிறைச்சியில் அதிக புரதச்சத்து நிறைந்திருப்பதால் அதை குழந்தைகள் உட்கொள்ளும் பொழுது கல்லீரல்,சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைந்துவிடும்.மூல நோய்,பல் சம்மந்தப்பட்ட பாதிப்பு,சளி போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருபவர்கள் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் ஆட்டிறைச்சியை தவிர்ப்பது நல்லது.ஆட்டிறைச்சியை எண்ணையில் வறுப்பதைவிட சூப் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் செம்மறி ஆட்டிறைச்சியை தவிர்த்துவிட வேண்டும்.

Exit mobile version