தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறையுமா?
தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் இளமையாகவும். சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும். பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் இருக்கிறது.
மேலும் தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது.
தக்காளியில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் மாற்றுகின்றன. வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன.
எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கிறது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும். கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. மாலைக்கண் வியாதியைத் தடுக்கவும் பயன்படுகிறது.