Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறதா!!

Does eating gooseberries every day cause so many changes in the body !!

Does eating gooseberries every day cause so many changes in the body !!

தினமும் நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறதா!!

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நல்லதோ அது போல் தான் நெல்லிக்காய். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காய்ச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால் அதில் பல தரப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது,அதிலும் நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று தெரியுமா? கல்லீரல் சுத்தமாகும் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி கல்லீரல் சிறப்பாகச் செயல்பட்டு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

மேலும் மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த சிகிச்சையாகும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மற்றும் இதய சுவாசப் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் நெல்லிக்காயைத் தேனில் ஊறவைத்து உட்கொண்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் டாக்ஸின்கள் நுரையீரலை பாதுகாக்கும்.இதனால் சுவாசம் சம்பந்தமானப் பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் தொண்டைக்கட்டு என்னும் தேனில் ஊறவைத்து நெல்லிக்காயுடன் சிறிது இஞ்சி சாற்றினை கலந்து உட்கொண்டு வந்தால் மருத்துவ குணங்களால் கிருமிகள் அழிக்கப்பட்டு பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர வேண்டும் உண்ணும் உணவுகள் எளிதில் செரிக்கப்படுவதோடு மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு விரைவில் குணமடையும். அதுமட்டுமின்றி நச்சுக்கள் வெளியேறும் உடலில் தினமும் சேரும் நச்சுக்களை வெளியேற்ற அன்றாடம் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இதன்மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் பெரும் பலன் ஏற்படும்.பெண்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனையைத் தடுக்கும்.அதுமட்டுமின்றி மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் மாதவிடாய் சுழற்சியும் சீராக்கப்படும். அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயைச் சாப்பிட்டு வர வேண்டும்,அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடவும் கூடாது இப்படி தினமும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் அல்சர் குணமாகும்.

உடலில் இரத்தம் அதிகரிக்க தினமும் சாப்பிடுவதால் ரத்த சோகை வராமல் இருப்பதோடு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆரோக்கியமாகவும் செயல்படும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டுவர அதில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகளையும் நீக்கும்.

Exit mobile version