Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருநாக்கு உள்ளவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா..இல்லையா!!

Does it work if people with black tongue curse..or not!!

Does it work if people with black tongue curse..or not!!

பொதுவாக கருநாக்கு உள்ளவர்கள் தற்பெருமை இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து செல்பவராகவும் இருப்பார்கள். அதேபோன்று எந்த இடத்திலும் பணிந்து செல்பவராகவும் இருப்பர் ஆனால் கோபம் என வந்துவிட்டால் பணிந்து செல்லக்கூடிய இடங்களில் கூட துணிந்து செயல்படுபவராக மாறிவிடுவர். இவர்களது வாழ்க்கையில் எப்பேர்பட்ட விருத்தி ஏற்பட்டாலும் அதற்கு மனம் வருந்தாமல் இதுவே திருப்தி என்று வாழ்பவர்களும் இவர்களே.
ஒரு வம்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்களிடம் பாதிக்கப்படுவதை விட பெற்றவர்களாலே பாதிக்கப்பட்ட வம்சங்களில் அல்லது குடும்பங்களில் இந்த கருநாக்கு உடைய ஜாதகர் பிறப்பது இயற்கை என்றும் ஜோதிடர் கூறியுள்ளனர். அவ்வாறு கருநாக்கு உள்ளவர்கள் கூறுவது அல்லது சாபம் விடுவது பலிக்குமா என்று கேட்டால்…. பலிக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறுவது அவர்களது வம்சாவளிக்கு மட்டுமே பலிக்கும் எனவும் கூறியுள்ளனர்.
அதாவது இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான சொந்த பந்தங்கள் இருந்தாலும், கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும் இந்த உலகத்தில் அண்ட நிழலும் இல்லாமல் ஆதரிக்க ஒருவரும் இல்லாமல் இருந்தாலும் அவர் நேர்மையானவராக இருந்தால் அவருக்கு ஒரு மகனோ அல்லது மகளோ கருநாக்கு உடையவராக கடவுள் பிறக்க வைத்து, அந்த பிறந்த குழந்தையின் மூலம் அவரது தாய் தகப்பன் அல்லது தாத்தா பாட்டி ஆகியோரை கேள்வி கேட்க வைக்கும்.
எனவே கருநாக்கு உடையவர்களுக்கு மன கஷ்டங்களை கொடுக்கும் பொழுது அவர்கள் கூறும் வார்த்தை பழித்து விடுகிறது. இந்த கருநாக்கு உள்ளவர்கள் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் தனது கோபத்தையோ அல்லது சந்தோஷமான வார்த்தையையோ கூறினால் அது அப்படியே பலிக்கும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் இத்தகைய நாட்களில் திட்டம் போட்டு எதையும் கூறுபவர்களாக இருக்க மாட்டார்கள், அத்தகைய சூழ்நிலையை மற்றவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.
கருநாக்கு உள்ளவர்கள் கூறுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்கள், சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு சாதத்துடன் கருப்பு எள் சேர்த்து படைப்பதன் மூலம் அவர்களின் சாபத்திலிருந்து விடுபடலாம் எனவும், கருநாக்கு உடையவர்கள் நம்மை ஏதேனும் சபித்து விடுவார்களோ எனவும் பயப்படத் தேவையில்லை.
கருநாக்கு உடையவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதோ, கெட்டவர்களுடன் கூட்டு சேர்வதோ விரும்ப மாட்டார்கள். மிகவும் எதார்த்தமானவர்களாகவும், அவர்கள் பேசும் வார்த்தை மற்றும் விடும் சாபங்கள் அவர்களை அறியாமலேயே வருமே தவிர எதையும் முன்கூட்டியே யோசித்து செய்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
மற்றவர்கள் எந்த தீங்கும் செய்யாத போது அவர்களுக்கு விடும் சாபம் திரும்ப அவர்களையே வந்து சேரும் என்பதும் உண்மை. யார் ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், விருச்சிகம் போன்ற ராசிகளில் இருந்து அவர்களுக்கு கருநாக்கு இருந்தால் அவர்கள் கூறும் வார்த்தைகள் பலிக்கும் என்பது உண்மை என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version