தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்து தூங்கினால் முடி கொட்டுமா?
நாம் அனைவரும் தூங்கும் பொழுது ஒவ்வொரு வகையில் தூங்குவோம். ஒரு சிலர் தலைக்கு ஒரு தலையணை வைத்து தூங்குவார்கள். ஒரு சிலர் இரண்டு தலையணை வைத்து தூங்குவார்கள். ஒரு சிலர் தலையணை வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு சிலர் மெத்தையில் தூங்குவதால் தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கும் பழக்கம் உடையவராக இருக்கலாம். இவ்வாறு படுத்து தூங்கும் பொழுது ஒவ்வொரு தோரணையில் நாம் தூங்குகிறோம்.
இதில் தலைக்கு கீழ் இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கம் அதிகமானவர்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு இரண்டு தலைமைகள் வைத்து தூங்குவது நல்லது கிடைக்குமா என்று கேட்டால் இல்லை. இரண்டு தலையணைகள் வைத்து தூங்கினால் நமக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கினால் ஏற்படும் பாதிப்புகள்/தீமைகள்:
* தலைக்கு ஏற்றபடி நாம் இரண்டு தலையணைகள் வைத்து தூங்குகிறோம். இதனால் நமக்கு கழுத்து வலி எற்படும். தடிமன் மிகுந்த தலையணை அல்லது அதற்கு பதிலாக இரண்டு தலையணைகளை வைத்து தூங்கும் பொழுது நமக்கு கழுத்து வலி ஏற்படும்.
* இரண்டு தலையணைகளை தலைக்கு வைத்து தூங்கும் பொழுது இது முதுகு வலியை ஏற்படுத்தும். அதாவது இரண்டு தலையணைகளை வைத்து நாம் தூங்கும் பொழுது முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்படும். இது நாளடைவில் முதுகு வலியாக வெளிப்படும்.
* நாம் இரண்டு தலையணைகளை வைத்து தூங்கும் பொழுது தலைக்குள் ஒரு முக்கியமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதாவது நாம் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்து தூங்குவது தலையில் சீராக இயங்கும் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி விடுகின்றது.
* தலைக்கு இரண்டு தலையணைகளை வைத்து தூங்கும் பொழுது தலையில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதும் தடைபடுகின்றது. இதனால் தலைமுடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
* நாம் தலைக்கு இரண்டு தலைமைகள் வைத்து தூங்குவதால் நமக்கு தோள்பட்டை வலி ஏற்படும். மேலும் கைகளில் வலி ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.
இரவு தூங்கச் செல்லும் முன்பு மென்மையான தலையணை பயன்படுத்த வேண்டும். தலையணைகள் சிறிய அளவில் அல்லது நடுத்தர அளவில் இருக்க வேண்டும். அவ்வாறு சிறிய அல்லது மென்மையான தலையணை பயன்படுத்தினால் எளிமையாக தூக்கம் வரும்.