Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே இரவில் கருவளையம் நீங்க இந்த ஒரு பேஸ்ட் போதும்!!

#image_title

ஒரே இரவில் கருவளையம் நீங்க இந்த ஒரு பேஸ்ட் போதும்!!

நம்மில் பலருக்கு கண்களுக்கு கீழ் கருப்பாக வளையம் போன்று இருக்கும். இந்த கருவளையம் நம் முகத்தின் அழகை குறைக்கின்றது.

மேலும் முகத்தை சோர்ந்தது போல காட்டக்கூடிய ஒன்று. இந்த கருவளையத்தை ஒரே ஒரு இரவில் இல்லாமல் மறையச் செய்ய அற்புதமான வழிமுறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் தோன்றுவதற்கு காரணம் பல சொல்லப்படுகிறது. அந்த காரணங்களுள் முக்கியமாக நாம் அதிக நேரம் கண் விழிப்பது, அதிக மன அழுத்தத்தில்(Stress) இருப்பது, மேலும் தொலைக்காட்சி, மடிக்கணினி(லேப்டாப்), அலைபேசி(மொபைல் போன்) போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண்கள் சோர்வு அடைந்து கண்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகின்றது. இந்த கருவளையத்தை எவ்வாறு மறையச் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இதை செய்ய தேவையான பொருட்கள்..

* கற்றாழை ஜெல்
* பாதாம் எண்ணெய்
* விட்டமின் ஈ மாத்திரைகள்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கடைகளில் வாங்கிய கற்றாழை ஜெல்லை எடுத்து அந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பாதாம் எண்ணெய்யை இதில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள இரண்டு விட்டமின் ஈ மாத்திரைகளையும் இதில் கலந்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.நன்கு கலக்கும் பொழுது ஒரு ஜெல் அளவிற்கு பதம் வரும்.

அந்த ஜெல் அளவிலான பதம் வந்த பிறகு இதை ஒரு சிறிய பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு கண்களுக்கு பயன்படுத்தலாம். முதலில் கண்களை நன்கு சுத்தமாக கழுவி ஈரம் இல்லாத அளவிற்கு துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஜெல்லை எடுத்து கண்களில் கருவளையம் உள்ள பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

இரண்டு நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தூங்கச் செல்லலாம். இதை தொடர்ந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் செய்தால் கட்டாயம் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

பாதம் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம் கண்களுக்கு தேவையான குளிர்ச்சியை அளிக்கின்றது. இதில் அதிக அளவில் விட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது.

இது கண் கருவளையத்தை போக்கக்கூடியது. பாதாம் எண்ணெயை கண்களில் தடவும் பொழுது நன்றாக தூக்கம் வரும்.

விட்டமின் ஈ மாத்திரைகள் பழைய சருமத்தை நீக்கி புதிய சருமத்தை தரக்கூடியது. இறந்த செல்களை நீக்கி புது செல்களை நமக்கு தரக்கூடயது இந்த விட்டமின் ஈ மாத்திரைகள். இந்த விட்டமின் ஈ மாத்திரைகள் சருமத்திற்கு நன்கு நிறத்தை கொடுக்கும்.

Exit mobile version