கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.