வீட்டு பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுதா? இந்த ட்ரிக் பயன்படுத்தி பேட் ஸ்மெல்லை கண்ட்ரோல் பண்ணுங்க!!

0
128
Does the house bridge smell bad? Use this trick to control bad smell!!

இன்றைய வாழ்க்கை சூழலில் அத்யாவசிய பொருட்களில் ஒன்றாக குளிர்சாதனப் பெட்டி(பிரிட்ஜ்) உள்ளது.நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

நீண்ட நாட்களுக்கு காய்கறிகள் கெடாமல் இருக்க,உணவுகளை பதப்படுத்த பிரிட்ஜ் பயன்படுகிறது.இவ்வாறாக பயன்படும் பிரிட்ஜை முறையாக பராமரிக்காமல் விட்டால் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

நீண்ட காலம் உணவுப் பொருட்களை தேக்கி வைத்தல்,அழுகிய காய்கறிகள் போன்றவற்றால் பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறது.பிரிட்ஜ் ஆப் நிலையில் இருக்கும் பொழுது ஐஸ்கட்டிகள் உருகி காய்கறிகள் வைத்துள்ள அறையில் தேங்கி அவற்றை அழுக வைக்கிறது.இதனால் பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ்கட்டிகள் படியாமல் பராமரிக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறை பிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.பிரிட்ஜ் சுவிட்சை ஆப் செய்த பிறகு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வெளியேற்றிய பிறகு காட்டன் துணி கொண்டு பிரிட்ஜை துடைக்க வேண்டும்.

எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பிரிட்ஜில் வைத்து தேய்த்த பிறகு வெது வெதுப்பான நீரில் காட்டன் துணியை நினைத்து பிழிந்துவிட்டு பிரிட்ஜை துடைத்தால் அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் நீங்கிவிடும்.

வினிகரை தண்ணீர் கலந்து பிரிட்ஜை துடைத்து வந்தால் துர்நாற்றம் நீங்கிவிடும்.தூள் உப்பு மற்றும் சோடா உப்பு கலந்த நீரை கொண்டு பிரிட்ஜை துடைத்து பராமரித்து வந்தால் கெட்ட வாடை வீசுவது கட்டுப்படும்.ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகள் கரைய உப்பு தூவிவிடலாம்.உருளைக்கிழங்கை கீறி உப்பு தூவி ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகள் மீது தேய்த்தால் அவை எளிதில் உருகிவிடும்.