பொதுவாக சாபங்கள் பலிக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. சாபங்கள் பலிக்கும் என்று சில ஜோதிடர்களும் கூறுகின்றனர். ஒருவர் வாழ்க்கையில் அதிகமான துன்பங்களையும், கஷ்டங்களையும் தாண்டி அவர் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளுக்கும் அதே போன்று அதிக மகிழ்ச்சியில் ஒருவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைக்கும் அதிகமான வலிமை உண்டு என்றும் கூறுகின்றனர்.
அவ்வாறு கூறும் நல்ல வார்த்தைகளும் சரி, சாபங்களும் சரி பலிக்கும் என்றே கூறுகின்றனர். நாம் எவ்வாறு மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வதில் நம்பிக்கை கொள்கிறோமோ அதே போன்று சாபங்களும் உண்மையானது. அவ்வாறு ஒருவர் விடுகின்ற சாபம் ஆனது தலைமுறையை தாண்டி பலிக்கின்ற வலிமையையும் கொண்டது. அவ்வாறு ஒருவர் விடுகின்ற சாபத்தினை அறிந்து அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து காண்போம்.
எதனால் சாபம் வந்ததோ அந்த இடத்தை நாம் மறைத்து மகிழ்ச்சியை உண்டாக்குகிற பொழுது அல்லது அந்த தவறுக்கான தண்டனையை மனதார ஏற்றுக்கொண்டு அனுபவித்த பின்னர் அவர்களிடத்தில் கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்கிற பொழுது அந்த சாபங்கள் நீக்கப்படுகிறது என்பது நிஜமான ஒன்றாகும். எனவே ஒருவர் விடும் சாபம் அல்லது நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மிடத்தில் வந்து சேரும்.
ஆனால் அதனை அறிந்து அதற்கான தண்டனையை அனுபவித்து கடவுளிடம் மன்னிப்பு கேட்கிற பொழுது அந்த சாபமானது விலகும். நமது முன்னோர்கள் பெண்களிடத்திலோ, இறந்துவிட்ட ஒருவரை இழிவாக பேசுவதாலோ, நமது முன்னோர்கள் அவர்களது குருவிற்கு மரியாதை கொடுக்காமல் இருந்தாலோ, நாகங்களை தேவையில்லாமல் கொள்ளுவதாலோ, அமாவாசை நாட்களில் நமது முன்னோர்களை வழிபடாமல் இருந்தாலோ அல்லது நம்மைப் பெற்ற தாய் தந்தையரை மதிக்காமல் இருந்தாலும் பாவங்கள் வந்து சேரும் என்பது உண்மை.
இத்தகைய பாவங்களை நமது முன்னோர்கள் எவரேனும் செய்திருந்தால் அதற்கான தண்டனை அந்த தலைமுறையை சேர்ந்த மூத்த மகனுக்கோ அல்லது மகளுக்கு தான் கண்டிப்பாக வந்து சேரும். எனவே தற்பொழுது வாழ்பவர்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அடுத்த தலைமுறையினருக்கு நன்மையாக அமையும்.