எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?
நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும்.
இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் கிழங்கை வேக வைத்து நன்கு காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து அருந்துவார்கள்.
இதன் விலை மிகவும் குறைவு ஆனால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.
பனங்கிழங்கின் மருத்துவ குணங்கள்:-
1)அதிக நார்ச்சத்து கொண்ட பனங்கிழங்கு மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.
2)அதிக இரும்பு சத்து கொண்ட இந்த கிழங்கு இரத்த சோகை நோய் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.
3)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
4)சிறுநீர் தொற்றை சரி செய்ய உதவுகிறது.
5)ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
6)சர்க்கரை இருப்பவர்களுக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
7)கண் எரிச்சல், வாய்ப்புண் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.