வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

0
229
#image_title

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது துர்நற்றம் வீச ஆரம்பிக்கும்.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறும் பொழுது தொற்று கிருமிகள் படிந்து மோசமான நாற்றத்தை வெளியேற்றும்.இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.இந்த உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

1)கடலை மாவு
2)பாசி பருப்பு மாவு

இந்த இரண்டு மாவையும் சம அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை அக்குளில் போட்டு பூசி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

1)எலுமிச்சை சாறு
2)உப்பு

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி உடலில் அதிகம் வியர்வை வெளியேறும் பகுதியில் பூசி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

1)ரோஜா இதழ்
2)கற்றாழை

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு சிறிது ரோஜா இதழை அரைத்து கற்றாழை ஜெல்லில் போட்டு கலக்கி வியர்வை வெளியேறும் பகுதியில் பூசி குளிக்கவும்.

1)வேப்பிலை
2)மஞ்சள்

ஒரு கப் வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு அதில் மஞ்சள் சேர்த்து கலக்கி உடலில் வியர்வை நாற்றம் வீசும் பகுதியில் பூசி குளிக்கவும்.