உங்கள் வீட்டில் பல்லி இந்த திசையை பார்த்து சத்தமிடுதா? அப்போ இது தான் அதற்கான பலன்!!
நமது வீட்டு சுவற்றில் சுற்றிதிரியும் பல்லிகள் சத்தமிடுவதை வைத்து பலன் அறியும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.நாம் ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தாலோ,சிந்தித்துக் கொண்டிருந்தாலே அச்சமயத்தில் பல்லி சத்தமிட்டால் அவ்விஷயம் நடக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு நிகழ்வு.அது மட்டுமின்றி பல்லி சத்தமிடும் திசையை வைத்து பலன் சொல்லப்படுகிறது.
அந்தவகையில் பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி இங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு காரியத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது பல்லி கிழக்கு திசையில் சத்தமிட்டால் அது ஒரு கெட்ட நிகழ்வு நடக் கூடும் என்பதற்கான அறிகுறிகளாகும்.உடல் நலக் கோளாறு,எதிரிகளால் ஆபத்து போன்ற கெட்ட நிகழ்வு நடைபெறக் கூடும் என்று அர்த்தம்.
வீட்டின் தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் அது மரணச் செய்தி வரக் கூடும் என்பதற்கான அறிகுறிகளாகும்.
தெற்கு திசையில் இருந்தபடி பல்லி சத்தமிட்டால் துக்க செய்தி,தோல்வி வரக் கூடும் என்று அர்த்தம்.தென்மேற்கு மூலையில் பல்லி சத்தமிட்டால் நன்மைகள் வந்து சேரும் என்று அர்த்தம்.
மேற்கு திசையில் இருந்தபடி பல்லி சத்தமிட்டால் சங்கடங்கள் ஏற்படும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகும்.
வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அது உங்கள் வீட்டில் நல்லது நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.
வட மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அது நற்செய்தி வந்துசேரும் என்பதற்கான அறிகுறிகளாகும்.