நாம் அதிக நேரம் நிற்கும் பொழுதும் அதிக நேரம் நடக்கும் பொழுதும் நமக்கு கால் வலி ஏற்படுகின்றது. கால் வலி ஏற்படும் பொழுது அதை குணப்படுத்த பலரும் எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆயில்மெண்ட் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது சில சமயங்களில் கால் வலி குணமாகும். சில சமயங்களில் கால் வலி குணமாகாது.
அவ்வாறு கால் வலி குணமாகாத சமயங்களில் நாம் மருதாணியை பயன்படுத்தலாம். மருதாணியை நாம் பயன்படுத்தும் பொழுது கால் வலி என்பது முற்றிலுமாக குணமடைகின்றது. இந்த மருதாணியை கால் வலிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* மருதாணி
* எலுமிச்சை
செய்முறை:
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொண்டு பின்னர் அதில் மருதாணி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்து இந்த மருதாணியில் இருந்து சாறு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பவுலில் மருதாணி சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை காலில் வலி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். தேய்த்து சிறிது மசாஜ் செய்தால் போதும். கால் வலி குணமாகும்.