Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்நேரமும் தோல் அரிப்பாவே இருக்கா? அரிப்பில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த எண்ணையை அப்ளை செய்யுங்கள்!!

உங்களுக்கு தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்.இதனால் நிச்சயம் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கக் கூடும்.

தோல் அரிப்பிற்கான காரணங்கள்:-

*கெமிக்கல் பயன்பாடு
*ஒவ்வாமை
*அதிகப்படியான வியர்வை வெளியேறுதல்
*தைராய்டு பாதிப்பு
*சுகாதார சீர்கேடு
*உடல் நலக் கோளாறு
*பூச்சி கடித்தல்
*அலர்ஜி
*சரும பராமரிப்பின்மை

இதுபோன்ற போன்ற விஷயங்களே தோல் அரிப்பு,தோல் தடிப்பு,தோல் சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கப்
2)நல்லெண்ணெய் – 50 மில்லி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கப் அளவிற்கு வேப்பிலை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த வேப்பிலை பேஸ்டை அதில் சேர்த்து குறைவான தீயில் காய்ச்ச வேண்டும்.

**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணெயை ஆறவிட வேண்டும்.பிறகு இதை ஒரு கண்ணாடி ஜாருக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

**இந்த ஏண்ணெயை தோல் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் பூசினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – அரை கப்
2)நல்லெண்ணெய் – 50 மில்லி

செய்முறை விளக்கம்:-

**முதலில் அரை கப் அளவிற்கு குப்பைமேனி இலையை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து 50 மில்லி அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

**பிறகு நறுக்கிய குப்பைமேனி இலையை அதில் போட்டு குறைவான தீயில் சூடுபடுத்த வேண்டும்.இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இந்த எண்ணெயை சூடுபடுத்த வேண்டும்.

**அதன் பிறகு அடுப்பு தீயை அணைத்துவிட்டு குப்பைமேனி இலை எண்ணையை நன்றாக ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த எண்ணெயை அரிப்பு ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்தால் இனி இந்த பாதிப்பை சந்திக்க மாட்டீர்கள்.

**வேப்பங்கொழுந்து மற்றும் வேப்பிலையை அரைத்து தோல் மீது பூசி குளித்து வந்தால் அரிப்பு,எரிச்சல் முற்றிலும் குணமாகும்.

**நாட்டு மருந்து கடையில் குப்பைமேனி தைலம் கிடைக்கும்.அதை வாங்கி தோல் மீது அப்ளை செய்து குளித்து வந்தால் அரிப்பு,எரிச்சல்,தோல் தடிப்பு போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.

Exit mobile version