Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேசும் போது திடீர்னு தொண்டை கட்டுதா? வெற்றிலையுடன் இந்த 4 பொருளை இப்படி சாப்பிடுங்கள்!!

சிலருக்கு பேசும் பொழுது திடீரென்று தொண்டை கட்டிக் கொள்ளும்.இதனால் சரியாக பேச முடியாமல் கடுமையான சிரமத்தை சந்திக்க நேரிடும்.இந்த தொண்டை கட்டல் குணமாக வெற்றிலை,கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு நாமே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)கிராம்பு – இரண்டு
3)மிளகு – இரண்டு
4)பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
5)சுக்கு – ஒரு பின்ச்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் வெற்றிலை,கிராம்பு,கருப்பு மிளகு,பெருஞ்சீரகம்,சுக்கு போன்றவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.

2.அதன் பிறகு வெற்றிலையை காம்பு நீக்கிவிடுங்கள்.அடுத்து வெற்றிலை மீது கிராம்பு,கருப்பு மிளகு,பெருஞ்சீரகம் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக மடித்து வாயில் போட்டு மென்று விழுங்குங்கள்.இப்படி செய்தால் தொண்டை பகுதியில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

3.வெற்றிலையுடன் துளசி,ஓமவல்லி மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டாலும் தொண்டை பகுதியில் ஏற்படும் அரிப்பு,கரகரப்பு நீங்கும்.

தொண்டை கட்டலுக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு – ஒரு துண்டு
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு துண்டு சுக்கை இடித்து அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

2.அடுத்து அதில் கால் தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் தொண்டை கட்டல் குணமாகும்.

Exit mobile version