எப்படி டீ போட்டாலும் சுவை நன்றாக வர மாட்டேங்குதா? அப்போ இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அடிச்சிக்க முடியாது!!

0
57
Doesn't taste good no matter how you brew the tea? Then try it in this way!! Can't beat the taste!!

எப்படி டீ போட்டாலும் சுவை நன்றாக வர மாட்டேங்குதா? அப்போ இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அடிச்சிக்க முடியாது!!

நம்மில் பலருக்கு டீ,காபி என்றால் உயிர்.இதை பருகினால் தான் அன்றைய நாளே நகரும் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.தேயிலை தூள் கொண்டு தயாரித்து ருசிக்கும் இந்த டீயில் நன்மை மற்றும் தீமை சம அளவில் இருக்கிறது.என்னதான் உடலுக்கு தீங்கு தரும் பானமாக இருந்தாலும் இதை ருசிப்பதை மட்டும் யாரும் விடுவதாக இல்லை.

டீ குடித்தால் சோம்பல்,களைப்பு நீங்கும் என்று நம்மில் பலர் கருத்தாக இருக்கிறது.பால் + தேயிலை தூள் கொண்டு தயாரிக்கப்படும் டீயை நாள் ஒன்றுக்கு 1 கிளாஸ் பருகினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

அனைவரும் விரும்பி பருகும் இந்த டீயை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைபடி செய்தால் மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கெட்டி தன்மை கொண்ட பால் – 1/4 லிட்டர்

*டீ தூள் – 2 தேக்கரண்டி

*சர்க்கரை – 2 தேக்கரண்டி

*ஏலக்காய் – 5

*இஞ்சி – ஒரு துண்டு(இடித்தது)

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 லிட்டர் பால் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் டீ பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் இடித்த இஞ்சி துண்டுகள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.

அடுத்ததாக 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை மற்றும் டீ தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.பின்னர் ஏற்கனவே கொதித்து கொண்டிருக்கும் பால் அடுப்பை அணைத்து விடவும்.இந்த பாலை கொதிக்கும் டீ தூள் கலவையில் ஊற்றி 2 முதல் 3 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு டீ செய்தால் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.