குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை!

0
127
doing-family-planning-and-getting-pregnant-again-tragedy-for-the-woman-who-underwent-surgery

குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு செய்து உள்ளார். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் நாட்கள் தள்ளிப் போய் உள்ளன. எனவே சிசுவை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அந்த சிகிச்சையின் போது தாய் உயிரிழந்து  விட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி ராணி. 28 வயதான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருப்பதால் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மேலும் அதன் பிறகு புதுக்கோட்டை அருகே கைகுறிச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த ராணிக்கு கடந்த வாரம் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது. அதனை  அடுத்து அதே மருத்துவமனையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்து பார்க்கும்போது, மீண்டும் குழந்தை உருவாகி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கின்றனர்.

எனவே இன்று அதற்கான அறுவை சிகிச்சை செய்யும் போது எதிர்பாராதவிதமாக ராணி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக அவரது உறவினர்கள் மருத்துவமனை மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 2018 அலட்சியமாக குடும்ப கட்டுப்பாடு செய்த மருத்துவ குழுவினர் மற்றும் தற்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ராணியின் உடலை பெற்றுச் செல்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் சேய்க்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், உயர்தர கருவிகள் என பல வசதிகள் அரசினால் ஏற்படுத்தப்பட்ட பின்னரும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது என்றும், ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை மொத்தம் 3 பேர் இறந்துள்ளனர் என்றும் இதற்கு தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தெரிவித்தார்.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் கூறியபோது இது குறித்து விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.