நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்றும் முக்கிய பழக்கங்களில் ஒன்று பல் துலக்குதல்.வாய் துர்நாற்றம் நீங்கி பற்களின் ஆரோக்கியம் மேம்பட பேஸ்ட் பயன்படுத்தி பற்கள் துலக்கப்படுகிறது.
ஆனால் சிலர் காலையில் எழுந்ததும் பற்களை துலக்காமல் டீ,காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.இதனால் வாயில் உள்ள அழுக்கு கிருமிகள் அனைத்தும் எளிதில் உடலுக்குள் சென்று ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
பற்களை துலக்கிய உடனே உணவு உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதை இன்றே நிறுத்திவிடுங்கள்.இது ஆரோக்கியத்திற்கு உகந்த பழக்கம் இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதேபோல் சிலருக்கு பற்களை துலக்கிய உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும்.இது உடலில் உள்ள பல நோய் பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் பற்களை துலக்கிய பிறகு தண்ணீர் பருகுவதால் உடல் எடை குறையும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பற்களை துலக்கிய உடனே தண்ணீர் பருக வேண்டும்.பற்கள் துலக்கிய உடனே தண்ணீர் குடிப்பதால் பல் சொத்தை உருவாவது தடுக்கப்படும்.உடலில் செரிமான அமைப்பு மேம்பட பல் துலக்கிய உடனே தண்ணீர் பருக வேண்டும்.சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்க பற்களை துலக்கிய பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக இப்படி தண்ணீர் குடிக்கலாம்.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைய பல் துலக்கிய பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.