US Election Result: அமெரிக்கா அதிபர் தேர்தலில் 47 வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் தேர்வு
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நேற்று நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இது அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் ஆகும். இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளது. ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் உறுப்பினர் குழு இருக்கிறது. குறைந்தது 270 உறுப்பினர் குழு ஆதரவை பெற்றால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அதாவது காலை 8 மணி நிலவரப்படி டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். டிரம்ப் 198 இடங்களில் 53%, வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 112 இடங்களில் 46% வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 54 உறுப்பினர்கள் ஆதரவு பெற்று கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாகாணத்தை கைப்பற்றி இருக்கிறார். மேலும் புளோரிடா மாகாணத்தில் தொடர்ந்து 3 வது முறையாக கைப்பற்றுகிறார் டொனல்ட் ட்ரம்ப். எனவே இவ்விருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது.
வெற்றி பெற 270 வாக்குகளுக்கு மேல் அதிக வாக்குகள் பெற்று அமெரிக்காவில் 47 வது அதிபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் ட்ரம்ப். இதனால் குடியரசு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி உரையை நிகழ்த்தி வருகிறார். அதில் ” குடியரசுக் கட்சி வெற்றி பெற வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கு எனது நன்றி.
மேலும் நமது நாட்டுக்கு இப்போது பெரிய உதவி தேவைப்படுகிறது.அமெரிக்காவின் அனைத்து பிரச்னைக்கு நான் தீர்வு காணப்படும். அமெரிக்காவை மகத்தான நாடாக மாற்றுவேன், மக்களின் உரிமைக்காக போராடுவேன் .
அமெரிக்காவின் பொற்காலத்தை உருவாக்குவேன். இது என் வாழ்வில் முக்கிய நாள் இது. என தன்னை வெற்றி பெற செய்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் டொனல்ட் ட்ரம்ப்.