Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யாரையும் தாக்குவதாக அமைய வேண்டாம்!! விஜய்யின் வேண்டுகோள்!!

Don't attack anyone!! Vijay's request!!

Don't attack anyone!! Vijay's request!!

அரசியல், சினிமா இவ்விரண்டிலும் கலக்கிக் கொண்டு இருக்கும் தலைவர் தான் விஜய். தற்சமயம் இவர் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த டைட்டில் ஆனது குடியரசு தினம் அன்றுதான் படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருந்தது. இவர் இப்படத்தோடு சினிமாவை துறந்து அரசியலில் முழு கவனம் செலுத்த இருப்பதாலும், இப்படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயரிட்டதாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் தொடக்கத்தில் இவருடைய இயக்குனரான வினோத்திடம், விஜய் ஒரு டிமாண்ட் வைத்துள்ளார்.

அது குறித்து இயக்குனர் கூறியதாவது, இது தளபதியின் கடைசி படம் என்பதால் முழுக்க முழுக்க அவருடைய படமாகத்தான் இது இருக்கும். மேலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக அமையும். விஜய் அவர்கள் கூறிய டிமாண்ட் என்னவென்றால், இப்படத்தை குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பார்ப்பார்கள். எனவே, யாரையும் புண்படுத்தும் வகையில் வன்மையாக எந்த காட்சியும் இப்படத்தில் இருக்க வேண்டாம் என்று விஜய் கேட்டதாக அவர் கூறியுள்ளார். தொலைநோக்குப் பார்வையுடன் விஜய் எப்பொழுதும் செயல்படுவார் என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய சான்று.

Exit mobile version