இன்று பெரும்பாலானவர் முதுகு வலி,மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி போன்ற பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் வேலை பார்த்தல்,கால்சியம் சத்து குறைபாடு,உட்காரும் நிலையில் மாற்றம் போன்ற காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது.
முதுகு வலி சாதாரண பாதிப்பு என்றாலும் அவை அதிகமானாலோ அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தாலோ அதை அலட்சியமாக கருதக் கூடாது.முதுகெலும்பு பகுதியில் கட்டிகள் உருவானால் அவை அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக இருக்க வாய்ப்பிருப்பதால் அலட்சியம் கொள்ளாமல் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.ஒருவேளை உங்களுக்கு முதுகு தண்டுவட புற்றுநோய் இருந்தால் சில அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிட முடியும்.
உங்களுக்கு முதுகு தண்டுவட புற்றுநோய் இருந்தால் அதீத முதுகு வலி ஏற்படும்.சாதாரண முதுகுவலி போன்று இல்லாமல் இந்த முதுகு வலி கூர்மையானதாக இருக்கும்.
முதுகு தாண்டவ புற்றுநோய் புற்றுநோய் இருந்தால் கீழ்கண்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
1)அதிகப்படியான முதுகு வலி
2)உரிய சிகிச்சை மேற்கொண்டும் முதுகு வலி குறையாமல் இருத்தல்
3)இரவு நேரத்தில் முதுகு வலி அதிகமாதல்
4)முதுகில் ஊசி குத்துவது போன்ற உணர்வு
முதுகு தண்டுவட புற்றுநோயின் அறிகுறிகள்:
*முதுகு தண்டுவடம் பலவீனமாதல்
*உடல் தசை தளர்வு
*நடக்க முடியாமல் போதல்
*சிறுநீர்ப்பை கோளாறு
*கால்களில் அதிக வெப்பம் உண்டதால்
முதுகு தண்டுவட புற்றுநோய் சோதனை மேற்கொள்வது எப்படி?
இரத்த பரிசோதனை,MRI ஸ்கேன்,ஆஞ்சியோகிராபி,முதுகு தண்டுவட பரிசோதனை,MRS போன்ற மருத்துவ பரிசோதனைகள் மூலம் முதுகு தண்டுவட புற்றுநோய் பாதிப்பை கண்டறிய முடியும்.