நம் ஊர் மண்ணில் விளையும் பழங்களில் பப்பாளியும் ஒன்று.இது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் விளைகிறது.இந்த பப்பாளியில் நாட்டு ரகம் மற்றும் ஹைபிரேட் என்று இருவகை இருக்கின்றது.நாட்டு ரக பப்பாளி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் ஹைபிரேட் பப்பாளியில் அந்த சுவையை எதிர்பார்க்க முடியாது.
பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
பொட்டாசியம்,போலிக் அமிலம்,நார்ச்சத்து,வைட்டமின் ஏ,சி,மெக்னீசியம்,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
பப்பாளி பழம் உட்கொண்டால் மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு நீங்கும்.பப்பாளி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் குணமாக,உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பப்பாளி பழம் உட்கொள்ளலாம்.
இந்த நன்மைகள் அனைத்தும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பப்பாளியில் மட்டுமே கிடைக்கும்.இரசாயனங்கள் கொண்டு பழுக்கவைப்பட்ட பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
லாப நோக்கத்திற்காக சிலர் கால்சியம் கார்பைடு மூலம் பப்பாளி பழத்தை பழுக்க வைக்கின்றனர்.இப்படி செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பப்பாளி பழத்தின் தோல் மஞ்சள் மற்றும் பச்சை திட்டுகளை கொண்டிருக்கும்.
செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பப்பாளி பழத்தில் சுவை இருக்காது.கால்சியம் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பப்பாளி பழத்தின் தோல் பகுதியில் வெள்ளை நிறத்தில் எச்சம் காணப்படும்.
இயற்கையான முறையில் பழுக்கவைக்கப்ட பப்பாளி பழத்தின் தோல் மென்மையாக இருக்கும்.ஆனால் செயற்கையாக பழுக்கவைப்பட பப்பாளி பழத்தின் தோல் தடித்து காணப்படும்.