தமிழகம் முழுவதிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் தமிழக அரசால் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகப்பானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை தெரிவிக்க புகார் எண் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு செய்தியையும் இந்த தொகுப்பில் காண்போம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
உழவர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் விதமாக தமிழக குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வாழக்கூடிய குடும்பங்களுக்கும் முறையே 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நாமக்கல் மாவட்டத்திலும் 5,39,303 அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் , 730 இலங்கை மறுவாழ்வு மையங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்கும் என மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கான கரும்புகள் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வழங்கப்பட அரசாணை வழங்கப்பட்டு இருப்பதாகவும் இதனை வேளாண்மை துறை அலுவலர்கள் சரிபார்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய உள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறக்கூடிய கரும்புகளை கொள்முதல் செய்வது தொடர்பான விவரங்களை முழுமையாக அறிய மாவட்ட அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் என மூன்று வகையான குழுக்கள் அமைக்கப்பட்ட இருப்பதாகவும், விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த மாவட்டத்திற்கு கரும்புகளை அவர்கள் தங்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றார்கள் என்ற விவரம் என அனைத்தையும் அறிந்து கொள்வதற்காக ஹெல்ப்லைன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ அல்லது வேறு ஏதும் நபர்களையோ நம்பி விவசாயிகள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக இந்த உதவி மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அவைகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் 0486 – 280272 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.