தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் உள்ள பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அடுத்த 63 வாரத்திற்கு நாம்தான் அதாவது தமிழக வெற்றிக்கழகம் தான் திமுகவிற்கு எதிர்க்கட்சி என்றும் விஜய் அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பேசியிருக்கிறார்.
இதைக் கண்டு கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்றுமே சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்றும் இதில் யாரும் இடையில் வந்து போட்டி போட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் ஆளும் கட்சியாக அதிமுக வரும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
நேற்று சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அயோத்தியா பட்டணத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதழ் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தற்பொழுது ஏழை எளிய மக்கள் அடிப்படையாகக் கொண்டு பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னும் சில முக்கிய விஷயங்களை கூட பகிர்ந்திருக்கிறார்.
அதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் கட்டாயமாக அதிமுக பங்கேற்கும் என்றும் அதிமுக சார்பில் இரண்டு நபர்கள் இதில் கலந்து கொள்வர் என்றும் தெரிவித்ததோடு கள்ள சாராய விற்பனை தற்பொழுது தமிழகத்தில் அதிகமாகிவிட்டதாகவும் போதைப்பொருள் நடமாட்டம் கூட அதிகமாக உள்ளது என்றும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.