உடைத்து விடாதே உள்ளே எதுவும் இல்லை:திருடனுக்கு வழக்கறிஞர் எழுதிய கடிதம்

0
116

உடைத்து விடாதே உள்ளே எதுவும் இல்லை:திருடனுக்கு வழக்கறிஞர் எழுதிய கடிதம்

திருடனுக்கு வழக்கறிஞர் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் காட்வின். வழக்கறிஞரான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவர் வீட்டில் வைத்திருந்த 55 சவரன் நகைகள் மற்றும் 25,௦௦௦ ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் காவல்துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டவரின் கைரேகை மற்றும் கொள்ளையடித்தவரின் முகம் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தும் கொள்ளையில் ஈடுபட்ட நபரை இன்றுவரை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இவரது வீட்டில் குடியிருந்த ஜான்பால் என்பவரது வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதிலும் தேவையான ஆதாரங்கள் கிடைத்தும் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கடந்த 28ஆம் தேதி வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. அவர் செல்வதற்கு முன்பாக திருடனுக்கு ஒரு கடிதம் எழுதி அதை வீட்டு பீரோவில் ஒட்டி உள்ளார்.

அந்த கடிதத்தில், தம்பி பீரோவை உடைத்து விடாதே. உள்ளே துணிகளை தவிர வேறேதும் இல்லை. எப்படியும் காவல்துறை உன்னை பிடிக்க போவதில்லை. சேதாரம் ஏதும் செய்துவிடாதே. என எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.