இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!
சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கையேட்டின் படி பெண்களை குறிப்பிடுவதற்கு என்று சில வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சமுதாயத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதற்காக அமைந்துள்ளது. இத்தகைய சொற்கள் சில நீதிமன்றத்தின் பயன்பாட்டில் கூட உள்ளன. அதற்கு சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது.
வரம்பு மீறி பேசப்படும் 40 வார்த்தைகளுக்கு பதிலாக புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு ஒன்றினை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய சந்திர சூட் கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் முறையற்றவை. இந்த கையேடு நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்யும் வகையில் வெளியிடப்படவில்லை. ஒரே மாதிரியான வார்த்தைகள் கவன குறைவாக தவறாக கையாளப்படுவது குறித்து சுட்டிக்காட்டவே இது வெளியிடப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் நீதிபதிகள் தீர்ப்புகளை சட்டபூர்வமான முறையில் வெளியிட்டாலும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தனி நபர்களின் கண்ணியம், நற்பண்பு, சுயத்தை குறித்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது.
எனவே அதனை தவிர்க்கும் பொருட்டு பெண்களை குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு வேறு வகையான முறையான வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக தவறிழைத்த பெண், முறை தவறிய பெண்களை குறிப்பாக பொதுவான வார்த்தையாக பெண் எனவே குறிப்பிட வேண்டும்.
அடுத்ததாக விபச்சாரி என்ற வார்த்தைக்கு பதில் பாலியல் தொழிலாளி, கள்ள உறவில் ஈடுபட்ட பெண் என்பதை திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்ட பெண், என்றும் தகாத உறவு என்பதை திருமணத்தை மீறிய உறவு, எனவும் அழைக்க வேண்டும். அடுத்ததாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளை கடத்தப்பட்ட குழந்தைகள் என்றும் வல்லுறவை பலாத்காரம் என்று குறிப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈவ்டீசிங் என்பதை தெரு பாலியல் துன்புறுத்தல் எனவும், ஹவுஸ் வைஃப் என்பதை ஹோம் மேக்க,ர் எனவும் முதிர் கன்னி என்பதை திருமணம் ஆகாதவர் எனவும், சோம்பேறி என்பதை வேலை இல்லாதவர் எனவும், திருமணமாகாமல் தாயானால் தாய் என்றும் அழைக்க வேண்டும் என அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வார்த்தைகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.