Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் தோல் நிறம் வெள்ளையாக க்ரீம் வேண்டாம்.. இந்த 10 வகை உணவுகளை சாப்பிடுங்க கலராகிடுவீங்க!!

பெண்கள் தங்கள் சருமத்தை வெள்ளையாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.இதற்காக க்ரீம்,பேசியல்,ஸ்கின் வொயிட்டனிங் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற செயற்கையான முறையில் சரும நிறத்தை மாற்ற முயற்சித்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே சரும நிறத்தை மாற்ற உடலை பளபளப்பாக வைத்துக் கொள்ள ஆரோக்கிய வழிகளை தேர்வு செய்யுங்கள்.நாம் உட்கொள்ளும் உணவு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.நாம் சாப்பிடும் உணவை பொறுத்து நம் தோற்றம் மாறுகிறது.

சரும நிறத்தை மேம்படுத்தும் உணவுகள்:

1)கேரட்

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

2)ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழம் சருமத்தை பொலிவாக வைக்கிறது.ஆரஞ்சு பழத்ததின் சாறை பருகி வந்தால் சரும நிறம் மேம்படும்.

3)தக்காளி

இந்த பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை சரி செய்கிறது.இளமை தோற்றத்துடன் இருக்க இந்த தக்காளி பழத்தை உட்கொள்ளலாம்.

4)கருப்பு திராட்சை

இந்த பழத்தை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் சரும நிறம் அதிகரிக்கும்.திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை பொலிவாக வைக்கிறது.

5)வெள்ளரிக்காய்

இந்த வெள்ளரிக்காயில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமம் பிரகாசமான இருக்கும்.

6)மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

7)முட்டை

தினசரி ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் நீங்கும்.

8)தயிர்

உணவில் தயிரை சேர்த்துக் கொண்டால் சருமப் பொலிவு அதிகரிக்கும்.தயிரை அரைத்து சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

9)க்ரீன் டீ

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் க்ரீன் டீயை தொடர்ந்து பருகி வந்தால் இயற்கையான முறையில் சரும பொலிவு அதிகரிக்கும்.

10)நட்ஸ்

பாதாம்,பிஸ்தா,முந்திரி போன்ற உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சருமப் பொலிவு அதிகரிக்கும்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Exit mobile version