அமாவாசை நாளில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

0
136

வளர்பிறை நாட்கள் என்பது அமாவாசைக்கு பிறகு வரும் நாட்கள் ஆகும். எனவே, வளர்பிறையில் புதிய காரியங்களை தொடங்குவது நிறையப்பேர் நலமென்று நம்புகிறார்கள். மேலும் அமாவாசை என்பது சந்திரன் அல்லாத நாள் அதாவது பூமிக்கு அன்று சந்திரன் தெரியாது இருட்டாகவே காட்சியளிக்கும். எனவே, இருட்டாக காட்சியளிக்கும் அந்நேரத்தில் நற்காரியங்களை செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்கள். இவற்றில் எது சரி? எது தவறு? என முடிவெடுப்பது சிரமமான காரியம் ஆகும்.

இதனை வானியல் சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவாசை தினம் அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இந்த இரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷண சக்தியும் மிகவும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புகள் நிறைய உண்டு. அதாவது ஏறக்குறைய கடலை போல.மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும்.

அமாவாசை நாளில் செய்யக்கூடியது என்னென்ன?

அமாவாசையில் பெரியோர்களையும், முன்னோர்களையும் வழிபடலாம்.

இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

அமாவாசையில் செய்யக்கூடாது என்னென்ன?

அமாவாசை நாளில் காற்று மற்றும் நீர் ஆகியன ஏற்ற, இறக்கமாக இருக்கும்.

அமாவாசை, பௌர்ணமி அன்று பொதுவாக எந்தவிதமான சுபநிகழ்ச்சியையும் செய்ய தயங்குவர். ஏனெனில், இந்த இரண்டு நாட்களிலும் நம் மனது ஒருவிதமான படபடப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக அந்த தினத்தில் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது என பெரியவர்கள் கூறுகின்றனர்.

அமாவாசையில் எந்தவொரு கடினமான வேலையும் செய்யக்கூடாது.

அமாவாசையன்று பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ இருக்கக்கூடாது.

வாசலில் அமாவாசையன்று கோலம் போடக்கூடாது எதற்காக?

பித்ருக்களுக்கு பிடிக்காத சிலவற்றை நாம் அமாவாசை நாளில் தவிர்க்க வேண்டும். அவையாவன, மணி அடிக்கும் ஒலி, கோலம், இரும்பு பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையினை தடுப்பதாக அமையும். இதன் காரணமாக இவை பித்ருக்களுக்கு பிடிக்காத ஒன்றாகும்.

எனவே, நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை அமாவாசையில் வீட்டு வாசலிலோ அல்லது பூஜையறையிலோ கோலம் போடுவதையும், தெய்வங்களுக்கு பூஜை செய்வதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும்,தவிர்க்க வேண்டும்.

முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் முடிகிற வரையில் வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின், பூஜையறையில் கோலம் போட்டு தீபத்தை ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையினை செய்ய வேண்டும்.