இரவு நேரத்தில் நீங்கள் இந்த காரியத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக வீட்டில் தரித்திரம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து விடாதீர்கள்.
எவ்வளவுதான் பூஜைகளும் எவ்வளவுதான் கடவுளை நம்பி மனமுருகி வேண்டினாலேம் நாம் வீட்டை விட்டு எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் நமக்கு நன்மை தேடி வரும்.
சிறிய வீடாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய வீடு அவ்வளவு சுத்தமாக அழகாக வைத்திருப்பார்கள்.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் குப்பையில் இருந்தால் அந்த வீட்டிற்கு பண வரவும் வராது. தரித்திரம் வந்து ஆட்டிப்படைக்கும்.
அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நீங்கள் உங்கள் வீட்டை எப்படி வைத்திருக்கிறீர்கள் என்று தான். இரவில் என்ன செய்யக் கூடாது என்பதை இப்பொழுது காணலாம்!
அன்னலட்சுமியின் வரம் பெற அன்னத்தை துடைக்கக் கூடாது என்பார்கள். இரவு சாப்பாடு சாப்பிட்டு முடித்த பின் மீதம் உள்ள சாதத்தைக் சுத்தமாக ஒரு பருக்கை கூட இல்லாமல் துடைத்து வழித்து எடுத்து விட்டு கழுவ போடக் கூடாது. அதனால் வறுமை ஏற்படும்.
முதலாவதாக இரவில் துணி துவைக்கக் கூடாது. அப்படி இரவில் சொட்ட சொட்ட நீங்கள் துணிகளை காயப் போடும் பொழுது பண வரவு தடைபடும்.
காலையிலேயே எழுந்து அழுக்கு துணிகளை துவைத்து உலர வைத்து மடித்து எடுத்து வைத்து விட வேண்டும்.
அதேபோல் சமையலறையை சுத்தம் செய்யும் என்று துணி துடைத்து விட்டு அப்படியே ஈரத்துடன் போட்டு வைக்கக் கூடாது. அதுவும் நல்லது கிடையாது.
இரவு நேரத்தில் நாம் செய்யும் இரண்டாவது தவறு மீதமான சாப்பாட்டை வெளியில் கொட்டுவது. இதையும் எந்த காரணம் கொண்டும் செய்து விடாதீர்கள். மீதமாகும் சாதத்தை கொட்டாமல் அப்படியே மூடிவைத்து மறுநாள் காலையில் வேண்டுமானால் அதை நாய் கோழிகளுக்கு போட்டுவிடலாம். அல்லது ஆதரவற்ற தெரு நாய்களுக்கு அந்த சாப்பாட்டை கொண்டுபோய் வைக்கலாம். குப்பையில் மட்டும் அதை கொட்டி விடாதீர்கள். அன்னத்தை நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குப்பையில் கொட்டுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களது பணவரவு தடைபடும். வீட்டில் வறுமை உண்டாகும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். முடிந்தவரை சிக்கனமாக சமையுங்கள். முடியாதபட்சத்தில் சாதத்தை வீணாக்காமல் மற்ற ஜீவராசிகளுக்கு உணவளியுங்கள். இதன் மூலம் சுபீட்சம் பெறுங்கள்.