Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்தேகமே வேண்டாம்.. கண் கருவளையம் ஒரே நாளில் மறையும் இந்த 5 குறிப்புகளில் ஒன்றை முயசித்தால்!

Don't doubt it.. If you try one of these 5 tips to get rid of dark circles in one day!

Don't doubt it.. If you try one of these 5 tips to get rid of dark circles in one day!

கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க கீழே சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.இவை கட்டாயம் கருவளையங்களை போக்கிவிடும்.

1)வெள்ளரிக்காய்
2)தேன்

ஒரு மீடியம் சைஸ் வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதை நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி செய்தால் கண் கருவளையம் அனைத்தும் மறைந்துவிடும்.

1)உருளைக்கிழங்கு
2)தேன்

ஒரு சிறிய உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு அதன் சதை பற்றை காய்கறி சீவலில் வைத்து சீவி எடுக்கவும்.

இந்த உருளைக்கிழங்கை 1/2 மணி நேரம் வைத்திருந்தால் அதில் இருந்து சாறு பிரிந்து வரும்.இதை ஒரு கிளாஸிற்கு பிழிந்து சிறிது தேன் கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் ஓரிரு வாரங்களில் மறைந்துவிடும்.

1)வாழைப்பழம்

எந்த வகை வாழைப்பழமாக இருந்தாலும் சரி ஒன்றை எடுத்து தோல் நீக்கிவிட்டு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.பிறகு இதை கண்களை சுற்றி அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு உலரவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி செய்தால் கருவளையம் அனைத்தும் நீங்கிவிடும்.

1)தேன்
2)பால்

ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பாலில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

1)பாதாம் பருப்பு
2)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு கிண்ணத்தில் இரண்டு அல்லது மூன்று பாதாம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.

பிறகு பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பாதாம் பேஸ்ட்டில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

Exit mobile version