Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

#image_title

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்.

அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.பாஜக கட்சிக் குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள் என்னை இதில் இழுத்துவிடாதீர்கள்.

12 மணி நேர தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தொழிலாளர்களிடம் விட்டுவிடுங்கள் அதனை அரசியலாக்க வேண்டாம்.நான் மருத்துவராக ஓர் கருத்து இதில் கூறுகிறேன். 4 நாட்கள் பணி 3 நாட்கள் விடுமுறை இருந்தால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.

கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் நீர் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

Exit mobile version